திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நிலை!
நாட்டில் சமீபகாலமாக மாவுக்கான விலை அதிகரிப்பாலும் தட்டுப்பாட்டினாலும் சிரமங்களை எதிர்நோக்குவதாக திருகோணமலை – தோப்பூர் பிரதேச வெதுப்பகங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக அடிக்கடி கோதுமை மாவுக்கான விலை அதிகரிப்பதனால் பொதுமக்களுக்கு நிர்ணய நிலைக்கு உணவுப் பொருட்களை வழங்க முடியாததாகவும் குறிப்பிடுகின்றனர்.
இப்படி மாவுக்கான விலை சென்றால் தற்போது மக்கள்தொழிலின்றி கஷ்டப்படும் நேரத்தில் கோதுமை மாவின் அதிகரித்தால் மூன்று நான்கு பேர் உள்ள குடும்பங்கள் எப்படி உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுவார்கள்.
ஒவ்வொரு நாளும் மாவின் விலை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கும் இவர்கள் இப்படியோ செல்லுமாக இருந்தால் தொழிலை இழந்து, வேலை செய்வோர் இருக்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும் குறிப்பிடுகின்றனர்.
இதனால் அரசாங்கம் மாவின் விலையை குறைத்துத்தருமாறு தோப்பூர் பிரதேச உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.