திடீரென உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப் சேவைகள் வழமைக்கு திரும்பியது
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சுமார் 500 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் இன்று நண்பகலில் வாட்ஸப் சேவைகள் தீடீரென முடங்கியது.
சாதாரண அரட்டைகளுக்கு மட்டுமின்றி, அலுவல் சம்பந்தமான விஷயங்களிலும் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
குறிப்பாக அரசு அலுவலகங்களில் உயர்மட்ட அதிகாரிகள் வாட்ஸ்அப் குழு மூலமாகவும் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறு
இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 12.45 மணியளவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனத்தை டேக் செய்து பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக #WhatsappDown என்ற ஹேஷ்டேக் குறியிட்டு பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் வேலைசெய்யவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
திடீரென ஏற்பட்ட இந்த முடக்கத்திற்கு, வாட்ஸ்அப் தரப்பில் உடனடி விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் முடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் விரைவில் சரிசெய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றும், திடீர் முடக்கத்திற்கான காரணம் தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வழமைக்கு திரும்பிய வாட்ஸப் சேவைகள்
இந்நிலையில் சற்று முன்னர் வாட்ஸப் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளனர்.