வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் என்ன செய்யக்கூடாது தெரியுமா?
எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன.அவற்றை அன்று கண்டிப்பாக செய்யக்கூடாது.. அப்படி செய்தால் வீட்டில் லட்சுமி கடாஷம் இல்லாமல் போய் விடும்.
வெள்ளிக்கிழமையில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்பது குறித்து நாம் இங்கு பார்ப்போம்.
விரதம் இருக்கும் முறை
வெள்ளி கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கு மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரதம் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.
விரத நாளன்று செய்யக்கூடாத விடயங்கள்
சமையலறை துடைத்தல் கூடாது
வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளையும் துடைக்கக் கூடாது. வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போட்டாலே போதுமானது.
பணம் கடனாக தர வேண்டாம்
வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது வியாழக்கிழமை அன்றே செய்துவிடவேண்டும். வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. தங்க ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. அதே போல பணத்தையும் கடனாக தரக்கூடாது.
உப்பை கடனாக கொடுக்கக்கூடாது
லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் அன்றைய தினம் உப்பை கடனாக யாருக்கும் கொடுக்கக்கூடாது.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் உப்பு வேணும் என்று கேட்டால் தரக்கூடாது.
வெள்ளிக்கிழமை எண்ணெய் குளியல்
வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல் முடி வெட்டுவதும் முகசவரம் செய்வதும் கூடாது. வெள்ளி கிழமை அன்று தேவையற்ற செலவுகளை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடி, நகம் இரண்டையும் வெள்ளிக்கிழமை வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
விரதத்தை முடிக்கும் முறை
அன்றைய தினம் முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும். ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.
இப்படி வெள்ளிக்கிழமை விரதத்தை தொடர்ந்து 11 வாரங்கள் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்துதான் தான், இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான் என்கிறது புராணக்கதைகள்..
மேலும் வெள்ளிக்கிழமை என்பது சுக்கிரனுக்குறியது. சுக்கிரன் என்பவர் செல்வம் மற்றும் ஆடம்பரமானவர். அதனால் வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்தால் செல்வம் தேடி வரும். லட்சுமி தேவி பண மழை பொழிவாள் என்பது ஐதீகம்