வெந்தய நீரை எப்படி குடிப்பது நல்லது? இதையும் தெரிஞ்சுக்கோங்க!
வெந்தயமானது சமையலுக்கு மட்டுமல்லாத பல உடல் நலப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வைத் தரும். இந்நிலையில் இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரைப் பருகுவது நல்லதா? அல்லது வெந்தயத்தை நீரில் கொதிக்கவைத்து குடிப்பது சரியானதா? எனும் குழப்பம் நிறைய பேருக்கு உள்ளது.
அதன்படி, ஊறவைத்த நீரா அல்லது கொதிக்க வைத்த நீரா எது சிறந்தது எனப் பார்ப்போம்.
ஊறவைத்த நீர்
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைக்கும்போது அவை நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை வெளியிடும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் செரிமானத்தை மேம்படுத்தும். அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவிடும். ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வழிவகுக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் நன்மை பயக்கும்.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தயாரிப்பது எளிதானது, தினசரி பருகுவதற்கு ஏற்றது.

தகாத உறவிலிருந்த மனைவியை வெட்டி காணொளி வெளியிட்ட கணவன் ; கதறி அழும் குழந்தை ; இறுதியில் நடந்த ட்விஸ்ட்
கொதிக்கவைத்த நீர்
வெந்தயத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது அதிலிருக்கும் சேர்மங்களை பிரித்தெடுத்து சக்தி வாய்ந்த பானமாக மாற்றும். சளி, இருமல், வீக்கம் போன்றவற்றுக்கு நிவாரணமளிக்கும்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இந்த இரண்டு விதமான முறைகளிலும் உடல் எடையை சீராக பேண ஊறவைத்த நீர் சிறந்தது.
சளி, இருமல், நச்சுக்களைப் போக்க கொதிக்க வைத்த நீர் சிறந்தது. ஆனால், எவ்வாறெனினும் வெந்தய நீரை தினமும் ஒரு டம்ளருக்கு மேல் குடிக்கக்கூடாது.