இவர் யார்? இலங்கையில் இவருக்கு என்ன பதவி...!!
இவர் ஏற்கனவே தன்னை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்தி இருந்தார் தற்போது அந்த கட்சி இவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டது என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ர ஊடகவியலாளர் நிலாந்தன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இன் நிலையில் இவர் ஊடகவியலாளர்கள் அவர்களது குடும்ப படங்களை போட்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய்யான ஆதாரமற்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அதுவும் தொடர்ந்து என்னை எனது குடும்ப படத்தை போட்டு பல சோடிக்கப்பட்ட பொய்களை பதிவு செய்து வருகிறார்.
என்னைப் பற்றி இவர் எழுத நான் அரசியல்வாதி இல்லை இல்லை! நான் உகாண்டாவில் சொத்து வாங்கினால் இவருக்கென்ன? காணி வாங்கினால் இவருக்கென்ன? இலங்கையில் உள்ள வளங்களை வெளிநாட்டுக்கு ஏற்றினால் இவருக்கு என்ன? அனுமதி பத்திரம் வைத்திருந்தால் இவருக்கு என்ன?
பல வாகனங்கள் வாங்கினால் இவருக்கென்ன? இவருக்கு இது குறித்து கேள்வி கேட்க என்ன அதிகாரம் உண்டு? இவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் என்னால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் அது குறித்த ஆதாரங்களுடன் பொலீசில் முறைப்பாடு செய்திருக்கலாம்.
என்னை பற்றியோ, எனது தனிப்பட்ட விடயங்கள் குறித்து இவருக்கு எழுத அதிகாரம் இல்லை, எனது ஊடகப் பணியை கூட இவர் விமர்சிக்க முடியாது, ஏனென்றால் நான் இவர் குறித்தோ இவரது குடும்பம் குறித்தோ நான் எந்த செய்தியும் எழுதவில்லை எனவே மட்டக்களப்பு சமூகம் இதற்கு ஒரு நீதியை சொல்ல வேண்டும், இந்த மாவட்டத்தில் மண் பேமிட் தொடங்கி எல்லா ஊழலும், நான் தான் செய்து வருகிறேன் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
இவர் போன்ற நபர்கள் எமது சமூகத்திற்கு சாபக்கேடாகனவர்கள், இவரை தூண்டி விடுவதில் சில ஊழல் அதிகாரிகள் இருப்பதையும் அந்த ஊழல் அதிகாரிகள் எப்படி மாவட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.
இதற்கு பின்னர் அவர் என்னைப் பற்றி பதிவு போடக் கூடாது. மாவட்டத்தில் ஊழல், கொலை, கொள்ளை, நாட்டையே விற்றுப்போட்டானுகள் அது குறித்து பதிவு போட துப்பில்லாத நபர்கள்.