பகலில் சம்பாதித்ததை இரவில் செலவழிக்க வேண்டும்; பெண் அமைச்சர்
பகல் பொருளாதாரத்தில் பணம் சம்பாதிப்பதாகவும், இரவுப் பொருளாதாரம் நாட்டில் அந்தப் பணத்தை புழக்கத்தில் விடுவதற்கான அமைப்பை உருவாக்குவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
அத்துடன் , பகலில் சம்பாதித்த பணத்தை இரவில் செலவழிப்பதன் மூலம் இரண்டாவது பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகவும், அதற்கு விபச்சாரம் அல்லது கெசினோ வியாபாரம் என்று கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பணப் புழக்கத்துக்கு இரவுப் பொருளாதாரம் தேவை
ஒரு நாட்டில் இரவு பொருளாதாரம் இல்லை என்றால் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இருட்டிய பின் அறையில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனவே , முதலில் கொழும்பை இரவு பொருளாதாரம் கொண்ட வணிக நகரமாக மாற்ற வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறினார்