அர்ச்சனாவின் சுயேட்சை குழு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
இலங்கையில் நடந்து முடிந்த 10 வது நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவானார்.
தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிராக 18 -01- 2025, ஆம் திகதி அன்று எவ்வாறான தீர்ப்பு வரும் என்பது தெரியாது.
இது தொடர்பாக பா.அரியநேத்திரன் என்பவர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எனக்கு தெரிந்த ஒரு தேர்தல் நடைமுறை தெரிந்த நண்பர் ஒருவருடன் கேட்டேன்.. அவர் கூறினார் அர்ச்சுனாவின் சுயேட்சை குழு பூரணமாக நிராகரிக்கப்பட்டால் அவரின் சுயேட்சை குழுவுக்கு கிடைத்த வாக்குகளை முற்றாக இரத்து செய்து மீள் கணிப்பீடு இடம்பெறலாம் என்றார்.
நான் மீள் கணிப்பீட்டை செய்து பார்த்தேன். சுயேட்சைகுழு பெற்ற மொத்த வாக்குகள் பூரணமாக நிராகரிக்கப்படும் அதாவது 27855, வாக்குகள் மொத்த வாக்குகளில் இருந்து கழித்து எஞ்சிய கட்சிகளில் 5, வீதம் கூடுதலாக பெற்ற வாக்குகளில் இருந்து மீள் கணிப்பீடு செய்யப்படும்.
அப்படி செய்தால்.. யாழ்.மாவட்டத்தில் கிடைத்த மொத்த வாக்குகள் 325312, இதில் சுயேட்சை குழு வாக்குகள் 27855, கழித்தால் 325312~27855=297457.
இதன்படி 5,வீதம் மேல் பெற்ற கட்சிகளின் வாக்குகள்:
1. தேசியமக்கள் சக்தி 80830,-24.85%
2. தமிழரசுகட்சி 63327,-19.47%
3. தமிழ்தேசிய முன்னணி 27986-8.06%
4. ஜனநாயக தமிழ் கூட்டணி 22513-6.92%
5. ஈபீடிபி: :17730-5.45%
6. ஐக்கியமக்கள் சக்தி 15275-5.02%
ஏனைய கட்சிகள் எதுவும் 5, வீதம் பெறவில்லை அதனால் அவை சேர்க்கப்படாது.
ஐந்து (5) வீதமான கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் 227666 %5=45532, (227666, வாக்குகளை 5, ல் வகுத்தால் ஒரு ஆசனத்துக்கு தேவையான வாக்குகள் எத்தனை என்பது தெரியும்)
ஒரு ஆசனத்துக்கு 45532, வாக்கு தேவை.
இதன்படி திசைகாட்டி 80830, வாக்குகள் 2, ஆசனமும்1, வோணஷ் ஆசனம் மொத்தம்03,
திசைகாட்டி-80830- 24,85% -03,
வீடு: -63327- 19.47% -01,
சைக்கிள். -27986- 8.06% -01,
சங்கு. -22413- 6.92% -01
வீணை. -17730- 5.45%
ரெலிபோன். -15276- 5.02%
வீடு: 63327-45532=17795 மிகுதி 17855,
எனவே 01, ஆசனம் சைக்கிள் 27986 -01, ஆசனம் சங்கு 22513-01, ஆசனம்
எனவே சுயேட்சைகுழுவின் ஊசி சின்னத்தின் ஆசனம் சங்கு சின்னத்திற்கு போக்கூடிய நிலை உண்டு.
சங்கு சின்னத்திற்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அந்த வாக்குகளில் விருப்பு வாக்கு எண்ணப்பட்டு கூடிய வாக்கை பெற்றவர் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
இந்த கணிப்பீடு எனது அறிவுக்கு எட்டியதாக கணிப்பீடு செய்யப்பட்டது. இதில் ஏதும் மாற்றங்களும் வரலாம் ஆனால் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே எல்லாமே அமையும் என பா.அரியநேத்திரன் என்பவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.