உழவு இயந்திர கலப்பையால் 5 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி
வவவுனியா பாலமேட்டை பகுதியில் உளவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்கி 5 வயது குழந்தை உயிரிழந்த சமபாவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் தமது காணியை உளவு இயந்திரத்தின் மூலம் உழுதபோது பெற்றோர் தனது இரு குழந்தைகளையும் உழவு இயந்திரத்தின் இரு மருங்கிலும் அமர்த்தி உழுதுள்ளனர்.
இதன்போது இயனத்திரத்தின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உழுது கொண்டிருந்த கலப்பைக்குள் அகப்பட்டு படுகாயம் ஏற்பட்டது. அதனையடுத்து குழந்தையை மீது வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.