நான் செய்ததில் என்ன தவறு?: கேள்வி எழுப்பிய நாமல் ராஜபக்ஷ
மாலைதீவுக்கு சென்று நீர் விளையாட்டுகளில் கலந்துகொள்வதில் என்ன தவறு என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, மாலத்தீவில் நிறைய நீர் விளையாட்டுகள் உள்ளன . விளையாட்டு நிகழ்வுகளை அவதானிக்கச் சென்றதாகவும், அதேவேளை நீர் விளையாட்டுகளிலும் ஈடுபட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது பழைய காணொளி என்று குறிப்பிட்டு தன்னை தொடர்பு கொண்டு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.