வடமராட்சியில் மதுபானத்திற்கு பதிலாக திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த பரிதாபம்!
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்ப்பரப்பில் கரைவலைத் தொழிலில் வலையில் சிக்கிய மதுபானப் போத்தலின் திரவத்தை அருந்திய 25 பேரில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் வறணி, குடமியனில் உள்ள வீட்டொன்றில் இருந்து ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று நாகர்கோவிலைச் சேர்ந்தவர் இதே மதுபானப் போத்தலின் திரவத்தை அருந்திய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு (மந்திகை) எடுத்து வரும் வழியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றினை எடுத்து திறந்து பார்த்தவேளை அதனுள் திரவம் ஒன்று இருந்துள்ளது.
அதனை மதுபானம் என நினைத்து அருந்தி சில நிமிடங்களில் மயக்கமடைந்த நிலையில் அம்பன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.