மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அருவருப்பானவர்கள் ; சீறிய ரஷ்ய அதிபர்!
மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்கள் என, ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
கராத்தே வீரரான ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin), வெற்றுடம்புடன் அவ்வப்போது செய்யும் சாகச புகைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த 'ஜி-7' மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.
இது பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூறுகையில், 'நாங்களும் உடைகளை கழற்றினால் புடினை விட வலிமையானவர்கள் என்பது தெரியும்' என்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)பேசுகையில், 'மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் புடின் போல வெற்றுடம்புடன் குதிரை சவாரி செய்யலாம்' என்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடன் புடின் (Vladimir Putin) கூறுகையில்,
மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கழற்றப் போவது, கால் சட்டையையா அல்லது மேல் சட்டையையா என்பது எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் அந்த தோற்றத்தில் அவர்களை பார்க்க அருவருப்பாகவே இருக்கும் என்றார்.
ஏனெனில் அவர்களிடம் மது அருந்துவது உள்ளிட்ட கெட்ட பழக்கங்கள் உள்ளன. என்னைப் போல கட்டான உடற்கட்டுக்கு தினமும் உடற்பயிற்சியும், விளையாட்டுகளில் பங்கேற்பதும் முக்கியம் அது, மேற்கத்திய தலைவர்களிடம் இல்லையே என்பது தான் என் கவலை எனவும் ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) கூறினார்.