கடந்த வருடத்தில் மட்டும் இத்தனை நாய்க்கடி சம்பவங்களா? மக்களே அவதானம்
கடந்த ஆண்டில் 184,926 பேர் நாய் கடியினால் சிகிச்சை பெற்றுள்ளதாக அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாய் கடியால் நோய்வாய்ப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டுதோறும் பல மில்லியன் செலவிடப்படுவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
நாய்க்கடி சம்பவங்கள்
கடந்த ஆண்டு மேல் மாகாணத்தில் அதிக நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் 4,035 பேர் நாய்களால் கடிக்கப்பட்டதாகவும் இவர்களில் 3,275 பேர் தெருநாய்களால் கடிக்கப்பட்டதாகவும், 759 பேர் வீட்டு நாய்களால் கடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
30,881 பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,1,151,350 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.