மட்டக்களப்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பில் சுகாதார விதிமுறைகளை மீறி வீடு ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பொலிஸார் நேற்று திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டதுடன் நிகழ்வை ஏற்பாடு செய்த நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு கோட்டமுனை பகுதியில் இடம்பெற்றது.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 110 பேர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.