வென்னப்புவ ஹெலிகொப்டர் விபத்து ; விசாரணைக்கு குழு நியமனம்
வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பான விசாரணைகளுக்கான விமானப்படையின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்தின் போதும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது உயிர் பற்றிய நம்பிக்கையை, மீட்புக் குழுவினர் தமது பகுதிகளுக்கு வரும்போதுதான் வளர்த்துக்கொள்கின்றனர்.

சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு, இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போதும் இலங்கை விமானப்படை ஒரு மகத்தான மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறது.
அந்த மாபெரும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், நேற்றைய தினம் (30)மனிதாபிமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிர்ழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.