உயிரிழந்த விமானி தொடர்பில் உருகவைக்கும் தகவல்!

Sri Lanka Air Force Floods In Sri Lanka Helicopter Crash Cyclone Ditwah
By Sulokshi Dec 01, 2025 07:00 AM GMT
Report

   வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உருகவைக்கும் பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அந்த பதிவில் , சின்னஞ்சிறு மகனின் அன்புக்குரிய தந்தையான நிர்மால், DITWA புயலினால் தனது உயிரை அகாலமாகப் பலியிட்ட இலங்கையர்களுடன் நேற்றைய தினம் இணைந்துகொண்டார் .

விலைமதிப்பற்ற இலங்கையின் விமானியாக... நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை வைத்துவிட்டு சென்றுவிட்டார் என பதிவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த விமானி தொடர்பில் உருகவைக்கும் தகவல்! | Relief Rescue Operations In Wennappuwa Death Pilot

ஆற்றில் வீழ்ந்து விபத்து

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (30) மாலை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் - 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

இதன்போது, ஹெலிகொப்டர் அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.

உயிரிழந்த விமானி தொடர்பில் உருகவைக்கும் தகவல்! | Relief Rescue Operations In Wennappuwa Death Pilot

பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய  (Nirmal Siyambalapitiya) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை நீக்கம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை நீக்கம்

உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி (Nirmal Siyambalapitiya) என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என நம்புகிறோம் ; மக்களுக்கு ஜனாதிபதி அனுர உருக்கம்

இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என நம்புகிறோம் ; மக்களுக்கு ஜனாதிபதி அனுர உருக்கம்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அதேவேளை டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் இலங்கையில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்கள் 366 எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும் 25 மாவட்டங்களில் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,118,929 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US