தாயார் வெளிநாட்டில்; பிறந்தநாளில் பாடசாலையில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
இன்று காலை வெல்லம்பிட்டிய பாடசாலையில் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிவிட்டு கை கழுவச் சென்ற சிறுமி மீதே கொங்கிரீட் தூண் விழுந்தது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஷெஹன்சா நிட்சராணி என்ற ஆறு வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தாயார் வெளிநாட்டில்
ஷெஹன்சாவின் ஆறாவது பிறந்தநாள் இன்று எனவும், பாடசாலையில் தனது தோழிகளுடன் கேக் வெட்டிய ஷெஹன்சா, கை கழுவுவதற்காக தண்ணீர் குழாயில் சென்ற நிலையில் இந்த அனர்தம் நேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தபோது, அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதாகவும் உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாடசாலைக்கு சென்ற சிறுவர்கள் உயிரிஅந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.