உடல் எடையை குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க
உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது.
எடை இழப்பு பானங்கள்
காலை வேளையை சரியான உணவு மற்றும் பானத்துடன் தொடங்கினால் அது உடலில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
காலையில் வயிறு காலியாக இருக்கும் இந்த நேரத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான பானங்களை குடிப்பதும் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
இந்த பானங்கள் உடலின் செரிமான அமைப்பை பலப்படுத்துவதால் உணவு நன்றாக ஜீரணமாகும்.
இந்த பானங்கள் குறைவான கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. இது எடையைக் குறைக்க உதவுகிறது.
இஞ்சி தேநீர்
பெரும்பாலும் மக்கள் காலையில் பால் டீ குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்க்கள். ஆனால் பால் டீயை விட இஞ்சி டீ உடலுக்கு நல்லது.
இஞ்சி டீ தயாரிக்க ஒரு கப் தண்ணீரில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை போட்டு நன்கு வேகவைத்து வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்க்கவும்.
இந்த டீயை குடிப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருப்பதுடன் கொழுப்பை எரிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
தேன் மற்றும் எலுமிச்சை
உடல் எடையை குறைக்க எலுமிச்சை மற்றும் தேன் டீயை தயாரித்து குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவும்.
இந்த டீயை குடிக்க ஒரு கப் தண்ணீரில் எலுமிச்சையை பிழிந்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
இந்த பானத்தை குடிப்பதன் மூலம் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன.
எலுமிச்சை மற்றும் சூடான நீர்
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமானம் மேம்படும் மற்றும் எடை குறையும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் கேடசின்கள் காணப்படுகின்றன. இது எடையை குறைக்கும் வேலையை செய்கிறது. இந்த தனிமம் epigallocatechin gallate என்று அழைக்கப்படுகிறது.
அதன் நன்மை என்னவென்றால், இதனால் வளர்சிதை மாற்றம் சிறப்பாகும்.
இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. கூடுதல் கலோரிகளை எரிக்கிறது.
கிரீன் டீ அருந்துவதால் முகத்தில் பொலிவு வரும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு சாறு நச்சு நீக்கும் பானமாக கருதப்படுகின்றது. கோடையில் ஆரஞ்சு பழங்கள் சந்தைகளில் கிடைக்கும்.
ஆரஞ்சு ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பணியை செய்கிறது. ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதால் கொழுப்பு வேகமாக குறையும்.
ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.