முகக்கவசம் அணியாது வாகனத்தில் செல்பவர்களிற்கு வருகிறது ஆப்பு
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை 778 போக்குவரத்து பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது 2,842 மோட்டார் சைக்கிள்களும் , 2,742 முச்சகரவண்டிகளும் அவற்றில் பயணித்த 8,394 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன் போது முறையாக முகக்கவசம் அணியாத 2,363 பேருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முகக்கவசம் அணியாமல் பயணிக்கின்றமையால் இலகுவாக தொற்றுக்குள்ளாகக் கூடும்.
எனவே முகக்கவசம் அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.