தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் கார்த்திக்கின் திருமண காணொளி!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்திக் இவருடைய தந்தை சிவகுமார் 90s காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் அந்தவகையில் இவரை தொடர்ந்து இவருடைய மூத்த மகன் சூர்யாவும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது அவருடைய தம்பியான கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கார்த்திக் அமெரிக்காவில் தன்னுடைய படிப்பை முடித்தவர்.
ஆனால் இவர் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கினார்.
ஏனெனில் இத் திரைப்படமானது பக்கா கிராமத்து பாங்கான திரைப்படம் இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கார்த்திக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது .
அவருடைய மனைவி பெயர் ரஞ்சனி. இவ்வாறு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனது கோயம்புத்தூரில் மிக கோலாகலமாக நடைபெற்றன.
இவ்வாறு திருமணதிற்கு பிறகு ஒரு மகளுக்கு தந்தையான நடிகர் கார்த்திக் இன்றும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையான நடிகர் கார்த்திக் முருகன் பக்தர் என்ற காரணத்தினால் தன்னுடைய மகனுக்கு பெயர் கந்தன் என பெயரிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் திருமணமாகி 10 வருடங்கள் ஆன நிலையில் தனது பத்தாவது திருமண நாளை கொண்டாடிய நடிகர் கார்த்திக் தன்னுடைய திருமண வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட அந்த காணொளியானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.