ஈரானின் புதிய தலைவருக்கு அமெரிக்கா வைத்த குறி ; மொஜ்தபா கமேனியை சூழ்ந்திருக்கும் ஆபத்தான கருப்பு படை
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிட்டுள்ளன. ஆனால் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய விஷயம் தெரியவில்லை. இதனால் தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் கொடுப்போருக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்கு இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின் கண்காணிப்பில் உள்ளதோடு, இதுதான் அந்த NOPO படையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிறப்பு படை பாதுகாப்பில் மொஜ்தபா கமேனி
இதையடுத்து ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத் தேர்வை இஸ்ரேல், அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் அவரையும் கொல்வோம் என்ற இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேபோல் அமெரிக்காவும் அவரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்து கோமா நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின இதனை ஈரான் இன்னும் உறுதி செய்யவில்லை.
இதுபற்றி அமெரிக்கா தரப்பில், ''மொஜ்தபா கமேனி படுகாயத்துடன் உயிருடன் இருக்கலாம்'' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அறிவித்தது.
இந்நிலையில் தான் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி 'நோபோ' (NOPO) பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 'நோபா' என்பது என்ன? அதில் இருக்கும் படை வீரர்கள் யார்? எப்படி செயல்படுவார்கள்? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
ஈரானில் இருக்கும் இன்னொரு படை தான் NOPO. சிறந்த போர் பயிற்சி, அவசர காலத்தில் மின்னல் வேகத்தில் எஸ்கேப்பாவது உள்ளிட்டவற்றில் கைதேர்ந்தவர்கள். NOPO என்பதன் பொருள் 'ஆட்சியை பாதுகாக்கும் சிறப்பு படை' என்பதாகும். இந்த 'நோபோ' படை பிரிவினரின் முக்கிய பணி என்பது உச்ச தலைவரை பாதுகாப்பது தான்.
எந்த காரணம் கொண்டும் எதிரிகளை உச்ச தலைவரை நெருங்காமல் பாதுகாப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் தான் ஆபத்து காலத்தில் அயதுல்லா அலி கமேனியை பலமுறை பாதுகாத்து வந்தனர். அந்த வகையில் தான் தற்போது மெஜ்தபா கமேனி இந்த 'நோபோ' படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது