புத்தாண்டு நாளில் வானிலை மாற்றம் ; இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு
இலங்கையில் இன்று(14) தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும்.

கொழும்பு முதல் மட்டக்களப்பு வரையிலான கடலோரப் பகுதிகளில், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது, ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.