வடக்கு, கிழக்கில் அதிக இடங்களைக் கைப்பற்றுவோம்; எம்.பி துரைராசா ரவிகரன்
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலும் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நம்பிக்கை வெளியிட்ட்டுள்ளார்.
அதோடு இலங்கை தமிழ் அரசு கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூர் அதிகார சபைகளையும் கைப்பற்றும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு உள்ளூர் அதிகார சபை
முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு, பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைச் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நிச்சயமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமான வட்டாரங்களில் வெற்றியீட்டி, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூர் அதிகார சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும்.
அத்தோடு வடக்கு, கிழக்கில் எமது இலங்கை தமிழ் அரசு கட்சி அதிகமான இடங்களைக் கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.