உடன்பாட்டுக்கு வாருங்கள் ...இல்லையேல் கார்க் தீவை அழிப்போம்; மிரட்டல் விடுக்கும் டிரம்ப் !
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் ஆனால் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த சில மணி நேரங்களில் கார்க் தீவை முழுமையாக அழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபரை கைது செய்ததோடு கிரீன்லாந்து எங்களுக்குதான் சொந்தம்.. தேவைப்பட்டால் அந்த நாட்டை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என கூறினார்.

கார்க் தீவை நாங்கள் கைப்பற்றுவோம்
அதுமட்டுமல்லாது ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். தற்போது ஈரான் நாட்டை இஸ்ரேலும் தாக்கி வருகிறது. ஈரான் நாட்டை கைப்பற்ற நினைக்கும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிரடியாக பேசி வருகிறார்.
ஏற்கனவே ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை நாங்கள் கைப்பற்றுவோம் என சொல்லியிருந்தார். அப்படி கைப்பற்றினால் அது ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதுடன் எரிபொருள் சந்தையில் பெரும் பங்களிப்பை ஏற்படுத்தும் எனவும் பலரும் கூறினார்கள்.
இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. ஆனால் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த சில மணி நேரங்களில் கார்க் தீவை முழுமையாக அளிப்போம் என டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஆனால் அமெரிக்காவுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுத்துள்ளது. கார்க் தீவு என்பது இரானின் கடற்கரையிலிருந்து வெறும் 15 கடல் மைல் (24 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவாகும்.
இது அளவில் சிறியதாக இருந்தபோதிலும், இரானின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மிக முக்கியமான பகுதியாக இது உள்ளது இத்தீவு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏறக்குறைய 90 விழுக்காட்டைக் கையாளும் முக்கியத் தளமாகும்.