இருவரும் ஒரே நேரத்தில் கருவாக இருந்தோம்; புனித் மறைவு தொடர்பில் சூர்யா உருக்கம்
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29-ம் திகதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
46 வயது நிறைந்த புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் புனித்ராஜ்குமாரின் மறைவிற்கு ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் புனித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபட்டது. இந்த நிலையில், பெங்களூர் சென்ற நடிகர் சூர்யா, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அஞ்சலி செலுத்தியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, ''புனித் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிந்து நெருக்கமானது.
நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார்.
எப்போது சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.
அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.