தமிழர்கள் என்பதால் நாம் புலிகளை ஆதரிக்கவில்லை! தொல்.திருமா
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்கள் என்பதால் ஆதரிக்கவில்லை, பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்ப்பதாலேயே அவர்களை ஆதரிப்பதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் (Thol. Thirumavalavan) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு உள்ளாகக் கூடிய ஒரு சிறுபான்மையினமாக உள்ளதால் தமிழர்களை நாம் ஆதரிக்கிறோம். சிங்கள பௌத்த பேரினவாதம் என்பதற்கு மாற்றாக தமிழ் இந்து சிறுபான்மை வாதம் என்ற அரசியலை பிரபாகரன் கையிலெடுக்கவில்லை.
அவர் எந்த இடத்திலும் இந்துக்கள் தாக்கப்படுகிறோம் நசுக்கப்படுகிறோம் என சொல்லவில்லை. தமிழ் தேசிய இனம் நசுக்கப்படுகிறது என்றே சொன்னார். மறந்தும் ஒரு மத அடையாளத்திற்குள் அவர் புதையவில்லை என தொல். திருமாவளாவன் தெரிவித்துள்ளார்.