யாழில் பழிவாங்கவே குண்டு வீசினோம்; விசாரணையில் வெளிவந்த தகவல் !

Sulokshi
Report this article
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை பொலிஸாரின் காவலரண் மீது நேற்றைய தினம் புதன்கிழமை இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற இருவரை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர்.
பொலிஸார் மீது கோபம்
கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் என எனதெவித்த பொலிச்சர் அவர்களிடம் விசாரணைமேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் , அண்மையில் மண்டைதீவு காவலரணில் வைத்து நபர் ஒருவரை பொலிஸார் போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு பழிவாங்கவே காவலரண் மீது தாக்குதல் நடாத்தியதாக சந்தேகநபர் தெரிவித்ததாக கூறிய பொலிஸார், , தொடர்ந்தும் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தாக தெரிவித்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால், தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.