அநுராதபுர மக்களுக்கு நாளையதினம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நாளை 08 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
நுவரெலியா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலியபுர, ரஜரட்ட பல்கலைக்கழகம், மிஹிந்தலை, யாழ்ப்பாணம் சந்தி, அனுராதபுரம் முதலாம் படி, மாத்தளை சந்தி, கல்குளம ஆகிய பகுதிகளுக்கு நாளையதினம் (18-11-2024) காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.