மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய நீர் ; அதிர்ச்சியில் மக்கள்
மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.

ஆச்சரியம்
இதையடுத்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு கிணற்றில் வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது அதுவும் நீல நிறத்தில் நிறம் மாறியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் கிணற்றிலுள்ள தண்ணீர் நீல நிறமாகிய விடயம் அப்பகுதியில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மழை காலத்தில் கிணற்றிலுள்ள தண்ணீர் நீல நிறமாக மாறும் சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.