யாழ்.நகரில் இப்படி ஒரு ஆபத்து; மக்கள் விசனம்!
யாழ்.நகரில் மழை வெள்ளத்துடன் கழிவு எண்ணெய் மிதப்பதனால் நிலத்தடி நீர் மாசடையும் ஆபத்து உருவாகியிருப்பதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். வாகன திருத்தகம் ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு எண்ணெயே இவ்வாறு மழை வெள்ளத்துடன் கலந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர் வரும் காலப்பகுதியில் எமது பிரதேச நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஒவ்வாத நிலைமைக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
குறித்த வாகன திருத்தகத்திலிருந்து மழை காலங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் கலந்து வெளியேறும் பெருமளவு கழிவு எண்ணெய் அப்பிரதேசத்தில் கறுப்பு வெள்ளமாக பல பகுதிகளுக்கும் பரவியும் சென்று நிலங்களை மாசுபடுத்துவதுடன் நிலத்தடி நீரிலும் கலந்துவிடுகிறது.
இது தொடர்பாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் பிரதேசவாசிகள் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த கராஜிலிருந்து 50 மீற்றருக்கு உட்பட்ட தொலைவில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை உள்ளதுடன் அருகில் யாழ் இந்துக் கல்லூரியும் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


