அமைச்சர் வசந்த சமரசிங்க அஸ்வெசும கொடுப்பனவில் வாழ்கிறாரா?
NPP கட்சியினர் தங்கள் சம்பளத்தை கட்சிக்கே வழங்குவதால் அமைச்சர் வசந்த சமரசிங்க அஸ்வெசும கொடுப்பனவில் தான் வாழ்கிறாரா என்று யோசனை எழுகிறது, என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலகே கூறினார்.
வசந்த, உங்கள் சம்பளத்தை உங்கள் கட்சிக்கு பங்களிக்க வேண்டியிருப்பதால், நீங்கள் அஸ்வெசும கொடுப்பனவில் தான் வாழ்வதாய் இருக்கக் கூடும்" என முன்னாள் எம்.பி. நந்தன குணதிலகே தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதியம் ஒழிக்கப்படும்
முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதியம் ஒழிக்கப்படும் போது, வாழ வசதி இல்லையென்றால், இலங்கையில் அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு முன்னாள் எம்.பி. விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்த கருத்துக்கே நந்தன இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.