கொழும்பு துறைமுகத்திற்கு வந்த போர்க் கப்பல்கள்!
கொழும்பு துறைமுகத்திற்கு ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றைய தினம் வந்தடைந்துள்ளன.
141 மீட்டர் நீளமுள்ள 'யுர்கா' என்ற போர்க்கப்பலும் 67 மீட்டர் நீளமுள்ள 'ஹரோடோ' என்ற இரு போர் கப்பல்களுமே இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்த இரு கப்பல்களிலும் 185 ஜப்பான் கடற்படை வீரர்கள் வருகை தந்துள்ளனர்.
கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னர் இலங்கை கடற்படை கப்பலுடன் இணைந்து வெற்றிகரமான கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டதுடன் , இதன் போது செயற்திட்ட பயிற்சிகள், போர் மூலோபாய பயிற்சிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த இரண்டு கப்பல்களும் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து மீண்டும் பயணத்தை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.