ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பகிரங்க பிடியாணை!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை ஏமாற்றியமை மற்றும் குறித்த இடங்களில் தங்கியிருக்காமை தொடர்பில் சட்டமா அதிபரினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகிலான இடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இவர் சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்தார்.
அதேவேளை தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.