சாணக்கியனுக்கு வெட்கமில்லை ; அமைச்சர் சந்திரசேகரன் எச்சரிக்கை
அண்மைய அனர்த்ததின்போது இலங்கைஅரசாங்கம் படுகொலை செய்துவிட்டது என்று வெட்கமில்லாமல் கூறும் சாணக்கியன், தமிழ் பெண்களை சித்திரவதை செய்து கொலை செய்யும் போதும், தமிழ் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடியும் போதும் ராஜபக்சர்களுடன் இருந்தார் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்ட பாரிய அனர்த்தத்தின் பின்னர் இன, மத பேதமின்றி முழுநாடும் ஒன்றிணைந்து இருக்கும் போது ஒருசிலர் அதனை சீர்குலைக்க செய்கின்றனர்.
இவர்கள் ராஜபக்சர்களின் வாலை பிடித்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் வெட்டிப்பேச்சால் ஒன்றும் நடக்கபோவதில்லை., இது எங்களுடைய அரசாங்கம், எங்களுடைய மக்கள் நாங்கள் அவர்களை பார்த்தக்கொள்வோம் என்று குறிப்பிட்டார்.
இந்த போன்ற பல விடயங்களை பற்றி பேசுகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி..