புலம்பெயர் நாடொன்றில் இலங்கை தமிழ் இளைஞன் செய்த முகம் சுழிக்கும் செயல்
கனடாவில் மார்கம் நகரில் வீடுகளுக்குள் நுழைந்ததாக தமிழ் இளைஞன் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் மார்கம் நகரை சேர்ந்த 36 வயதான இலங்கையர் என தெரிவிக்கப்படுகிறது.

நன்னடத்தை பிணை
பூட்டப்படாத கதவு வழியாக சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்தார் எனவும் வீட்டு உரிமையாளரை எதிர்கொண்டபோது அவர் பயந்து ஓடிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள குறைந்தது மேலும் இரண்டு வீடுகளுக்குள் நுழைய முயன்று தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் குறிபிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழரான சந்தேக நபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில், குறித்த நபர் வேறு குற்றங்களுக்காக நன்னடத்தை பிணையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் வேறு எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவைர நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.