இலங்கையில் சருமத்தை வெண்மையாக்கும் கீர்ம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!
நாட்டில் சருமத்தை வெண்மையாக்கும் அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதால், தோல் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக, தோல் நோய் விசேட வைத்திய நிபுணர்கள் நிறுவனத்தின் தலைவர், வைத்தியர் சிறியானி சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களை மாத்திரம் பயன்படுத்துமாறு மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் உடலில் செல்களை சேதப்படுத்தி புற்று நோயை ஏற்படுத்துமென, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் இந்திரா கஹவிட்ட தெரிவித்துள்ளார்.