இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தினால் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
அதனுடன் நீண்ட நேர மின் விநியோகத் தடை முன்னெடுக்கப்படுவதாகவும் நியூசிலாந்து உயரஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகள் அவசர நிலைமைகளின் போது நியூசிலாந்து தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.