உலக சுற்றுலாவுக்கான சிறந்த இடமாக தெரிவான யாழ்ப்பாணம் ; வர்த்தக சங்கம் வழங்கிய உறுதி
அடுத்த ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது உறுதியளிக்கப்பட்டது.

உட்கட்டமைப்பு மேம்பாடு
வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
நகர அழகாக்கல், சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாநகர சபையின் மேயர், மாநகர சபையின் ஆணையாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.