பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் பல பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இன்று (29) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே பொதுமக்கள் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்