பாரிய மண் சரிவு; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நோட்டன் வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்ட காரணத்தினால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நோட்டன் வீதியில் ஹட்லிஸ் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியில் வீதி அகலப்படுத்தப்பட்டு காபட் ஈடும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் மலையகத்தில் தற்போது மாலை வேளையில் பலத்த காற்றுடன் மழையுடனான காலநிலையும் நிலவுகின்றது.
இதன் போது நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீதியோரத்தில் காணப்படும் மின்சார கம்பங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு மின்சார கம்பங்களும் குறித்த வீதியில் சரிந்து கிடப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மீன் கம்பங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மஸ்கெலியா, நோட்டன் ,கலவலத்தெனியா போன்ற பகுதிகளுக்கும் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளத்தால் அப்பகுதி மக்களும் பாரிய அசௌகரியங்களை சந்தித்தனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு சீர் செய்வதற்கு தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது உடனடியாக மேற்கொள்ளமுடியாத சூழ்நிலையும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
,


