கடற்றொழிலாளர்களுக்கான எச்சரிக்கை தகவல்!
இலங்கையை சுற்றி இருக்கும் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு செல்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இது குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில்,
இலங்கையைச் சூழ காற்று ஒன்றிணைவதால் காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
இந்த கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவும், சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும்.
இந்த கடல் பகுதிகளிலும் (2.0 – 2.5) மீ உயரம் (இது நிலப்பரப்புக்கானது அல்ல) கொண்ட அலைகள் வீசுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.