தமிழர் பகுதியில் தென்னிலங்கை இளைஞன் அதிரடி கைது
Puttalam
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Viro
புத்தளம் , ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஆராச்சிக்கட்டுவ - பண்டாஹேன பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 396 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதுடைய கொழும்பு - மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US