மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தாமல் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகத்தை இடைநிறுத்தம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மக்களுக்கு காலா அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாதாந்த கட்டணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்கள் கூட தொடர்ந்து கட்டணத்தை செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். இதனால் பல மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாது இருந்த வாடிக்கையாளர்களு சிவப்பு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பட்டியலானது மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்பான எச்சரிக்கையாகும்.
இதில் அவ்வபோது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.