இஸ்ரேல் செல்லவிருக்கும் இலங்கையர்களுக்கான ஓர் எச்சரிக்கை தகவல்!
ஜோர்தானிலிருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும் 3 இலங்கையர்கள் போர் சூழலுக்கு மத்தியில் எல்லையை கடந்து இஸ்ரேலுக்கு செல்ல முயன்று அந்நாட்டு சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிக்கியுள்ளவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் கடுமையான குற்றம் எனவும் அது தவறான நடத்தை எனவும் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
போர் சூழ்நிலையில் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என்றும் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது என அவர் குறிப்பிடுகின்றார்.