உடல் எடையை வேகமா குறைக்கணுமா? காலையில் எழுந்தவுடன் இதை பண்ணுங்க
உடல் பருமன் இந்த காலத்தில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க பலர் பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
சில எளிய வழிகள்
குறைந்த கலோரி உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சிகளை சேர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது உடல் எடையை குறைக்க உதவும் சில எளிய வழிகள் ஆகும்.
காலை எழுந்தவுடன் சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொண்டால் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க முடியும்.
இஞ்சி சாறு (Ginger Juice)
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ அதை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக இஞ்சி சாறு அல்லது எலுமிச்சை சாறு குடிக்கலாம். இவை உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
புரதம்(Proteins)
கொண்ட உணவுகள் காலை உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறான உணவுகளை உட்கொண்டால் அது நாள் முழுவதும் பசியை ஏற்படுத்தி அதிக உணவுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சி (Exercise)
காலையில் செய்யப்படும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் வளர்ச்சிகை மாற்றத்தை மேம்படுத்தவும் கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவும்.
சூரிய ஒளி (Sun Light)
காலை வேளையில் சூரிய ஒளியை பெறுவது நல்லது. இது வைட்டமின் டி அளவை மேம்படுத்துகிறது. காலையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பதை வழக்கமாகி கொள்ளலாம்.
தியானம் (Meditation)
தினமும் காலையில் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். இது தூக்க சுழற்சியையும் உடலின் சர்க்காடியன் இயல்பார்க்கும். மன அழுத்தத்தை குறைப்பது கொழுப்பை விரைவாக குறைக்க உதவும். அந்த வகையில் இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.