13 மணி நேரம் காத்திருந்து ராணிக்கு அஞ்சலி செலுத்திய பிரபலம்!
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இங்கிலாந்து கால்பந்து சூப்பர் ஸ்டார் டேவிட் பெக்காம் (David Beckham ), 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
எலிசபெத் மகாராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹோலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வரிசையில் திரண்ட மக்கள்
அங்கு மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவதால், கி.மீ.,க்கணக்கில் வரிசைகள் நீண்டு கிடப்பதைக் காணலாம். மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் உணர்ச்சிகரமான தருணம்
இந்நிலையில் 47 வயதான கால்பந்து நட்சத்திரம் (David Beckham ) ராணி எலிசபெத்தை கௌரவிப்பதில் உணர்ச்சிவசப்பட்டதாக கூறியுள்ளார்.
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்’ என்று வெஸ்ட்மின்ஸ்டர் ஹோலில் இருந்து வெளியேறும் போது அவர் (David Beckham ) பெக்காம் ஊடகங்களிடம் கூறினார்.