யாழில் 5 கிலோ கோதுமைக்காக நடுவீதியில் அடிவாங்கிய கூலித் தொழிலாளி!
யாழ்ப்பாணம் தம்பசிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கூலித் தொழிலுக்காக உடுப்பிட்டி பகுதிக்கு சென்றிருந்தார். அன்றைய நாள் கூலியில் 5 கிலோகிராம் கோதுமை மா வாங்கி, தனது சைக்கிளின் பின்னால் வைத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
பிற்பகல்வேளை வதிரி- உடுப்பிட்டி வீதியில் டேவிட் முகாமிற்கு அண்மையாக, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டமில்லாத வேளையில் திடீரென அவரை வழிமறித்து அடித்து நிலத்தில் விழுத்தி, கோதுமை மா பையை பறித்துச்சென்றுள்ளனர்.
இதன்போது கூச்சலிட்ட போது, அவரது முகம் மற்றும் உடலெங்கும் கடுமையாக தாக்கி விட்டு கோதுமை மாவுடன் தப்பிச் சென்றதாகவும், அதன் பின்னர் அந்த வழியால் வந்தவர்கள், நிலத்தில் விழுந்தவரை எழுப்பி, வீடு திரும்ப உதவி செய்தனர்.
அதேசமய்ம் நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுகளின் எல்லைப்பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் இவ்வாறான பல வழிப்பறி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.