விளாடிமிர் புடின் ஒரு பைத்தியக்காரன்; விளாசிய அலெக்ஸி நவல்னி!
உக்ரைனில் போரை தொடங்கிய விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஒரு பைத்தியக்காரன் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) கூறியுள்ளார்.
நேரடி நீதிமன்ற விசாரணையின் போதே அவர் இவ்வாறு புடினை விமர்சித்துள்ளார். புடின் (Vladimir Putin) தொடங்கிய முட்டாள்தனமான போர் என்றும் நவல்னி மாஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பில் கூறினார்.
அத்துடன் இந்தப் போர் பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்றும், ஒரு பைத்தியக்காரன் உக்ரைனுக்குள் நுழைந்துவிட்டான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த பைத்தியக்காரத் திருடன் அதை என்ன செய்ய விரும்புகிறான் என்று எனக்குத் தெரியவில்லை என்றும் புதின் (Vladimir Putin) தொடர்பில் நவல்னி (Alexei Navalny) கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.