பிரமாண்டமான காரை வாங்கிய தொகுப்பாளினி ஜாக்லினின் உருக்கமான பதிவு!
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின். இவர் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ரக்சனுடன் ஜாக்லின் இணைந்து தொகுத்து வழங்கினார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் கோலமாவு ஜாக்லின் நடித்திருந்தார்.
தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தேன்மொழி BA ஊராட்சி மன்ற தலைவர் என்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் ஜாக்லின், தனது அம்மா மற்றும் தோழியுடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், கார் என்பது இதுகுறித்து பொருள் அல்ல, அது எங்களின் பல்வேறு உணர்வுகளை கண்டுள்ள இரண்டாம் வீடு. என தந்தை கார் ட்ரைவர் என்பதால் சிறு வயதில் நான் அதிகம் காரில் தான் இருப்பேன். இது எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபர். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.