இந்திய துணை ஜனாதிபதி வருகை 38 ஆண்டுகளுக்கு முன்னம் நடந்ததை நினைவு படுத்துமா?
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. இராதகிருஷ்ணன் எதிர்வரும் 2026 ஏப்ரல் 19ஆம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளார்.இவரது வருகை 38 ஆண்டுகளுக்கு முன் நடந்த அன்னை பூபதியின் போராட்ட நினைவு நாளை முன்வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது பயணத்தின் போது, கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த வருகை நடைபெறும் ஏப்ரல் 19ஆம் திகதி, 1988ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு முக்கிய வரலாற்றுச் சம்பவத்துடன் இணைந்த நாளாகவும் குறிப்பிடப்படுகிறது.

அந்த நாளில், அன்னை பூபதி (56) இந்திய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தார்.
இதன் 38ஆம் ஆண்டு நினைவு தினம் இதே நாளில் அனுசரிக்கப்படுகின்றது.
அன்னை பூபதியின் போராட்டம், அக்காலகட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையை உலக கவனத்திற்கு கொண்டு வந்த முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த பின்னணியில், இந்திய துணை ஜனாதிபதியின் இம்முறை இலங்கை வருகை, வரலாற்று நினைவுகளையும் அரசியல் விவாதங்களையும் மீண்டும் முன்வைக்கும் வாய்ப்புள்ளதாகக் காணப்படுகிறது.