விராட் கோலி - அனுஷ்கா ஜோடிக்கு பிறந்த ஆண் குழந்தை! பெயர் என்ன தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும் நடிகை அனுஷ்கா ஷர்மா காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு 2021ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தைப் பிறந்த நிலையில் அவருக்கு வாமிகா என பெயர் சூட்டினார்கள்.
அனுஷ்கா ஷர்மா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருடன் இருப்பதற்காக விராட் கோலி இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினர்.
இவ்வாறான நிலையில் அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
பெப்ரவரி 15ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது எனவும், மகனுக்கு அகாய் (Akaay) என பெயர் சூட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது விராட் - அனுஷ்கா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.